மனிதநல உரிமைகள் கழகத்தின் சார்பாக இன்று நிறுவனத் தலைவர் திரு. L. ஜோஸ் அவர்களின் தலைமையில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிதாக மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றதற்காக வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், பொதுமக்கள் நலன் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவும் அளிக்கப்பட்டது.
இந்த சந்திப்பின் போது, மாவட்ட மக்களின் அடிப்படை தேவைகள், சமூக நலன், அரசு நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடைவது, மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. மேலும், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள பழமையான கிறிஸ்தவ சிற்றாலயத்தை, நோயாளிகள் பிரார்த்தனை செய்து மனநிம்மதியடையும் வகையில் மீண்டும் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அத்துடன், கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகள், ஆலயங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளின் அருகாமையில் செயல்பட்டு வரும் மதுபானக் கடைகளை அகற்றவும், அவற்றை மக்கள் வசிப்பிடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களிலிருந்து பாதுகாப்பான தூரத்திற்கு மாற்றவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மனிதநல உரிமைகள் கழகத்தின் அமைப்புச் செயலாளர் திரு. செல்லத்துரை, கன்னியாகுமரி மாவட்ட புரவலர் திரு. வின்சன் சாஜி, கன்னியாகுமரி மாவட்ட சிறுபான்மையினர் அணி செயலாளர் திரு. அகமது கபீர், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர் திரு. கே. செல்வின், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் திரு. W. அஜின், கிள்ளியூர் ஒன்றியச் செயலாளர் திரு. சசி, கன்னியாகுமரி மேற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் அட்வகேட் ஜான் ஆன்சிலின், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் திரு. ஹரிசந்திரன், உறுப்பினர்கள் திரு. மோகன், திரு. சசிகுமார் மற்றும் அட்வகேட் நிதின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மேலும், மனிதநல உரிமைகள் கழகம் சார்பில் மாவட்ட வளர்ச்சி, பொதுமக்கள் நலன், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான பணிகளில் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
