உலக மனித உரிமைகள் தின விழா இராமநாதபுரம் மாவட்டதில் 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ம் தேதி நடைபெற்றது. காலை 10.00 தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே ஆரம்பித்து நிறுவனத் தலைவர் Mr.L.ஜோஸ் B.Sc., MBA., மற்றும் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி, மற்றும் பொதுச்செயலாளர், Mr.M.சுரேஷ், மற்றும் அமைப்புச்செயலாளர், Dr.B.ஆறுமுக பாண்டியன், மற்றும் அமைப்பாளர், Mr. P.K. சரவணன், மற்றும் மாவட்ட தலைவர் கே.பாக்கியராஜ். B.Com., ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
மாவட்ட தலைவர் கே.பாக்கியராஜ். B.Com., வரவேற்பு உரை ஆற்றினார். மனித உரிமைகள் தினம் அறிமுக உரையை அமைப்புச்செயலாளர், Dr.B.ஆறுமுக பாண்டியன் மனித உரிமைகள் குறித்து பேசினார். அதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகள்களுக்கு நிறுவனத் தலைவர் Mr.L.ஜோஸ் B.Sc., MBA., தலைமை நிலைய நிர்வாகிகள் பதவி பிரமாணம் செய்து வைத்தனர். தலைமை உரையை நிறுவனத் தலைவர் Mr.L.ஜோஸ் B.Sc., MBA., மனித நல உரிமைகளின் முக்கியத்துவம் குறித்து பேசி பின்னர் பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. வழக்கறிஞர்.அன்புசெழியன் சமூக நீதி & மனித நல பாதுகாப்பு குறித்து சிறப்பு உரை ஆற்றினார். அட்வகேட்.அசோக்குமார் பெண்களின் உரிமைகள் குறித்து சிறப்பு உரை ஆற்றினார். பொதுச் செயலாளர் Mr .M. சுரேஷ், மற்றும் தமிழ்நாடு மாநில மருத்துவ அணியின் செயலாளர் Dr. V. மனோவா ஷாம் ஷாலின் மற்றும் தென் சென்னை மாவட்ட செயலாளர்.M T. S. சித்தரஞ்சன் வாழ்த்துரை வழங்கினார்கள். மாவட்ட கழக செயலாளர் M.சதாஸ் கிருஷ்ணன். M.B.A., நன்றி உரை ஆற்றினார். இறுதியாக தேசிய கீதம் அனைவரும் பாடி விழா இனிதே முடிக்கப்பட்டது.
